22 ஆண்டுகளுக்குப் பிறகு… திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தயாரான தாமிர கொப்பரை!

22 ஆண்டுகளுக்குப் பிறகு… திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தயாரான தாமிர கொப்பரை!


திருப்பரங்குன்றம் மலையில் வருகின்ற 3-ந்தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்கு கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு புதியதாக தாமிர கொப்பரை தயார்படுத்தப்பட்டுள்ளது.

அதை அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி வழங்கினார்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா தொடர்ந்து வருகின்ற 4-ந் தேதி வரைநடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 3-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பெரிய மணி அடித்ததும் “பால தீபம்” ஏற்றப்படுகிறது.

அதே சமயம் மணி ஓசை கேட்டதும் சம காலத்தில் மலையில் உள்ளஉச்சிப் பிள்ளையார்கோவில் வளாகத்தில் உள்ள மேடையில் “கார்த்திகை மகா தீபம்” ஏற்றப்படுகிறது கடந்த ஆண்டு முதல் கடந்த 2024ஆண்டு வரை மூன்றை அடி உயரமும், இரண்டறை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை பயன்படுத்தி வந்தனர். மேலும் 300 கிலோ நெய், 100 மீட்டர் கடா துணியிலான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.. ஆனால் இந்த ஆண்டு பழைய தாமிர கொப்பரை தவிர்க்கப்பட்டு 70 கிலோ எடை கொண்ட 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட புதிய தாமிர கொப்பரை பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் 400 லிட்டர் நெய், 150 மீட்டர் கடாதுணியிலான திரி, 5 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தாமிர கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இந்த தாமிர கொப்பரையை கோவிலுக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியாபாலாஜி, மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பாலாஜி ஆகியோர் வழங்கினார்கள். திருவண்ணாமலையில் தயாரான புதிய தாமிர கொப்பரை கோவிலுக்கு வரப்பட்டது. அதற்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியாபாலாஜி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 400 லிட்டர் நெய், 150 மீட்டர் திரி, 5 கிலோ கற்பூரம் உள்ளிட்ட தீப உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையில் மலையில் உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் மேடை சார்ந்த சுவற்றில் வெள்ளையடித்து, சிவப்பு நிறத்தில் காவி பூசி தயார்ப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!