திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அறங்காவலர் குழுவினர் மீண்டும் நியமனம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அறங்காவலர் குழுவினர் மீண்டும் நியமனம்!


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக பா.சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் நா.மணிச்செல்வன், திமு.பொம்மதேவன் வ.சண்முகசுந்தரம், தி.ராமையா ஆகியோர் கடந்த 2024 மற்றும் 2025 ஆகிய 2 ஆண்டுகள்பதவி வகித்து வந்தனர்.

இவர்கள் தங்களது பதவி காலத்தில் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ரூ.2 கோடியே 37 லட்சத்தில்பல்வேறு திருப்பணிகள் செய்து கோவிலில்கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் செய்தனர். மேலும் கோவிலுக்குள் லட்சுமி தீர்த்தகுளம் புரனமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தனர்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் நிபந்தனையின்படி 2 ஆண்டுக்கு உரியஅறங்காவலர் குழுவிற்கான பதவி காலம்கடந்த 2 வாரத்துக்கு முன்பு முடிந்தது .இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் அறநிலைய பணியை தொடர்ந்திட தற்போது உள்ள அறங்காவலர் குழு தலைவர் உள்பட அறங்காவலர்களை மீண்டும் நியமித்து அதற்கான உத்தரவை பிற்பித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!