தொல்லியல் துறை மூலம் போலி ஆவணங்களை தயாரிக்க தமிழக அரசு முயற்சி! -அர்ஜுன் சம்பத்

தொல்லியல் துறை மூலம் போலி ஆவணங்களை தயாரிக்க தமிழக அரசு முயற்சி! -அர்ஜுன் சம்பத்

பள்ளிக்கல்வித்துறையை, சீர்திருத்தம் செய்ய வேண்டும்..
இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன்சம்பத் பேட்டி..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பேக்கரி கடையை இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குத்துவிளக்கேற்றி திறநது வைத்து பேசினார். அப்போது.செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பள்ளிக்கல்வித்துறை மிகவும் சீரழிந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தை சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டிய வழக்கு நிலுவையில் உள்ள போது தமிழக அரசு வேண்டுமென்றே, தமிழக அரசின் கீழ் இயங்குகின்ற தொல்லியல் துறை அதிகாரிகளை அனுப்பி போலி ஆவணங்களை தயாரிக்க தமிழக அரசு முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்..

மேலும் எல்லா திமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்து கொண்டிருப்பதாகவும், நீதிபதிக்கு அச்சத்தை ஏற்படும் வகையில் திமுகவும் கூட்டணி கட்சிகளும் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்..

செய்தியாளர் தஞ்சாவூர் எஸ். மனோகரன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!