நெற்றியில் பூசிய விபூதியை பெண்கள் பார்க்கக் கூடாது…விநோத வழிபாட்டால் மெய்சிலிர்க்க வைக்கும் கோயில்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் – பல்கலைகழகம் சாலை பிரிவில் பிரசித்தி பெற்ற உச்சி கருப்பணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சாமி உருவம் கிடையாது இதே சமயம் சுமார் 7 அடி உயரமுள்ள அரிவாளும், பக்தர்கள் நேர்த்திக்காக செலுத்திய நூற்றுக்கணக்கான வெண்கல மணிகளும்தான் கோவிலின் கருவறையாக அமைந்து உள்ளது.

இங்கு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் விடலை தேங்காய் உடைத்தும் வாழை பழங்கள் பக்தர்களுக்கு பரிமாறி உச்சி கருப்பணசுவாமியை வழிபட்டு வருகிறார்கள் இது தவிர ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சாமிக்கு முப்பழங்கள் படைக்க கூடிய கனி மாற்றும் திருவிழா விசேஷமாக நடந்து வருகிறது அதே போல இந்த ஆண்டிற்கான கனி மாற்றும் விசேஷ விழா நேற்றுவிமர்ச்சியாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சி கருப்பணசுவாமியின் பெட்டி இருக்கும் இடத்தில் இருந்து ஹார்விப்பட்டி பாண்டியன் நகர் திருநகர் பகுதி மெயின் ரோட்டின் வழியே உச்சி கருப்பணசுவாமி கோவில் வரை ஆயிரக்கணக்கில் முப்பழங்களை சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர் பின்னர்அங்கு சாமி சன்னதியில் உச்சிகருப்பணசுவாமிக்கு மா, பலா வாழை பழங்களை குவியலாக படைத்தனர். மேலும் 7 அடி உயர மாலை சூடி பத்தி, சூடம் ஏற்றி தீபாரதனை காட்டினர். அங்கு ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு சாமியை வழிப்பட்டனர்.

இதனையடுத்து சாமிக்கு படைக்கப்பட்ட பழங்களை ஒவ்வொரு ஆண் பக்தருக்குமாக டஜன் கணக்கில் முப்பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற் முறையை பின்பற்றி் அங்கே தங்களால் முடிந்த அளவு பக்தர்கள் சாப்பிட்டனர். மேலும் ஆண்கள் நெற்றியில் பூசிய விபூதியை பெண்கள் பார்க்க கூடாது என்ற தெய்வீக நெறியை் பக்தர்கள் பின்பற்றினர் இச்செயல் இப்பகுதி மக்களை மெய்சிலிர்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

One thought on “நெற்றியில் பூசிய விபூதியை பெண்கள் பார்க்கக் கூடாது…விநோத வழிபாட்டால் மெய்சிலிர்க்க வைக்கும் கோயில்

Leave a Reply

error: Content is protected !!