கப்பலூர் சுங்கச்சாவடியில் லாரி மீது லாரி மோதி விபத்து-பதற வைக்கும் CCTV காட்சிகள்.

திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் , சுங்கவரி கட்டணம் செலுத்துவதற்காக கவுண்டரில் நின்ற லாரி மீது லாரி மோதியதில் ஊழியர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சி.

            மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் ,  அதிகாலை நான்கு மணி அளவில் சுங்கச்சாவடியில் சுங்கவரி கட்டணம் செலுத்த வந்த லாரி , கவுண்டர் முன்பு நின்று கொண்டிருந்தபோது,  லாரியின் முன்புறமுள்ள பாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதற்காக ஊழியர் வண்டி முன்பு வந்து ஸ்கேன் செய்தபோது,  அந்த லாரியின் பின்புறம் உள்ள வண்டி மோதியதில்,  ஸ்கேன் செய்து கொண்டிருந்த ஊழியர் தினேஷ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளன.




          இதில் சுங்கச்சாவடி ஊழியர் தினேஷ் என்பவர் காயமடைந்து,  அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!