நன்றி சொன்ன நல்ல பாம்பு… வியப்படைந்த வீட்டு உரிமையாளர்! -வைரல் வீடியோ.!
மதுரை மாவட்டம் பொன்மேனி அருகே உள்ள ராகவேந்திரா நகரில் சதிஷ் என்பவரது வீட்டில் கழிவுநீர் செல்லும் குழாயில் திடீரென சத்தம் கேட்டதை அடுத்து பாம்பு இருப்பதாக அச்சமடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருநகர் பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கழிவு நீர் குழாயில் சிக்கிக்கொண்ட நல்ல பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது,

உன்னை காப்பாற்ற கூப்பிட்டவருக்கு நன்றி சொல்லிரு என பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபு கேட்க உடனே அந்த நல்ல பாம்பு தலையை திருப்பி நன்றி சொல்லும் விதமாக திரும்பி பார்த்தது வீட்டு உரிமையாளரை ஆச்சரியப்பட வைத்தது. பின்னர் 3 அடஅ நீளம் கொண்ட அந்த நல்ல பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.