மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் மேம்பாலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி பிரிவை அடுத்து நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது சுமோ கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காரில் சென்ற குழந்தை உட்பட 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் பசுமலை ஜோன்ஸ்புரம் சேர்ந்த நான்சி லினிட்டா ராணி (வயது 34) என்றும் அவர் ஆசிரியர் பணி செய்கிறார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.