மூன்று மாத காலத்திற்குள் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி, மத்திய அரசால் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த சுங்கச்சாவடி, நெடுஞ்சாலை துறையின் விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக, சுங்கச்சாவடி அமைத்த நாளிலிருந்து திருமங்கலம் நகர் மக்கள் மற்றும் வாகன வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில்,
இன்று (21.12.22) கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெயராமன் தலைமையில் , 10 பேர் கொண்ட குழுவினர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் K.குமார் ஆகியோருடன்,
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி – யை , சுங்கச்சாவடி குறித்து நேரில் பேசி மனு அளித்தனர். அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மூன்று மாத காலத்திற்குள் கப்பலூர் சுங்கச்சாவடி – யை அங்கிருந்து அகற்றி தருவதாக உறுதி அளித்துள்ளதாக, டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெயராமன் டெல்லியில் இருந்து கூறியுள்ளார்.
சுங்கச்சாவடி அமைப்பதென்றால் நகர் புறத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும் என்பது விதி, ஆனால் கப்பலூரில் அமைத்துள்ள சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து , ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!