குமரியின் சபரிமலையில் கும்பாபிஷேகம்.. மின்னொளியில் ஜொலித்த குபேர ஐயப்பன் கோவில்!

குமரியின் சபரிமலையில் கும்பாபிஷேகம்.. மின்னொளியில் ஜொலித்த குபேர ஐயப்பன் கோவில்!

மருந்துவாழ் மலையில் பின்பகுதியில் சுமார் 500அடி உயரத்தில் அமைந்துள்ள பொட்டல்குளம் அய்யன்மலை குபேர அய்யப்ப சாமி கோவிலில் யாகசாலை பூஜை உடன் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் குமரியின் சபரிமலை என்று அழைக்கப்படும் பொட்டல்குளம் அய்யன்மலை குபேர அய்யப்ப சாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவில் காலை முதல் இரவு வரை யாகசாலை பூஜைகள். தீபாராதனைகள் நடந்தது. கோவிலில் (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு திருமுறை பாராயணம், காலை 11.30 மணிக்கு யாக திரவிய ஹோமம், மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 9 மணிக்கு கலச பிரதிஷ்டை போன்றவை நடைபெற்று. காலை 7மணிக்கு மங்கள இசையும், காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் குபேர அய்யப்பசாமி கோபுர சிகர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு படிபூஜை, 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.காந்தி, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அய்யன் மலை அய்யப்ப சாமி கோவில் நிர்வாகி தியாகராஜ சுவாமிகள் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர் வெகு விமர்சியாக செய்திருந்தனர். கும்பாபிஷே விழாவைக்காக மூன்று கிலோ மீட்டர் வண்ண விளக்குகளாலும் அலங்கார வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது மேலும் சுவாமி வீட்டிற்கும் மலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கவிக்கப்பட்டிருந்தது இதில் சுற்றுவட்டார கிராம மக்கள், ஐயப்ப பக்தர்கள், சுற்றுப்புற ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பால்குடம் ஊர்வலத்திலும், இடிந்தகரை கிறிஸ்தவ மீனவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் தமிழர் கட்சி முன்னாள் வேட்பாளர் ஜெனிபர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!