துபாயில் ஹிந்து கோவில் திறப்பு- இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சி.

துபாய்-ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கம்பீரமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இங்கு, அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இது மகிழ்ச்சியான செய்தி என இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் அனைத்து மதத்தினருக்கும் தனித் தனி வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு, ஏற்கனவே ஏழு தேவாலயங்கள், குரு நானக் தர்பார் சீக்கிய குருத்வாரா ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்த பகுதி வழிபாட்டு கிராமம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு பிரமாண்டமான ஹிந்து கோவில் அமைப்பதற்கு, 2020 பிப்ரவரியில் பூமி பூஜை நடத்தப்பட்டது.

கொரோனா காலத்திலும் கட்டுமான பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, எமிரேட்ஸ் அரசு போதிய ஆதரவு அளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!