
வருங்கால பிரதமர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக போஸ்டர்
மதுரையில் அதிமுக சார்பாக வரும் 20ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவைகளை ஒட்டி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிமாறன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மதுரை, சிவகங்கை மாவட்டப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்.அதில், ‘வருங்கால பாரத பிரதமர் எடப்பாடியார்’ என நாடாளுமன்ற பின்னணியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

போஸ்டர் ஒட்டிய மணிமாறன் கூறுகையில், ‘‘மதுரையில் 20ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு 20 லட்சம் பேர் வரை வருவார்கள். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு நடைபெற உள்ளது. எடப்பாடி முதலமைச்சர் அல்ல. பிரதமர், ஜனாதிபதியாகும் அளவிற்கு தகுதி உள்ளது’’ என்றார். அப்போது நிருபர்கள், ‘‘பாஜ உடன் கூட்டணி என்றாலும் எடப்பாடிதான் பிரதமரா’’ என கேட்டபோது, ‘‘ஆமாம். எங்களுக்கும் ஆசை உள்ளது’’ என்றார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.