தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று கப்பலூர் தொழிற் பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள்,தனது செல்போனில் மழை பெய்ததை வீடியோ எடுத்த போது செல்போன் மீது இடியுடன் கூடிய மின்னலொளி தாக்கியது.
மின்னலொளி தாக்கியவுடன் செல்போனை தூக்கி வீசி எறிந்து விட்டு தலை தெறிக்க ஓடிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக வீடியோ எடுத்த நபருக்கும் செல்போனுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.
சிறிது நேரம் கழித்து தான் எடுத்த வீடியோவை செல்போனில் பார்த்த பொழுது மின்னலொளி தாக்கிய வீடியோவை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். நல்லவேளை தான் நூலிலையில் உயிர் தப்பியதாக உணரப்பட்டு பின்னர், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் பொழுது இது போன்று யாரும் செல்போனில் படம் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என விழிப்புணர்வு பதிவாக இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.