ராஜபாளையம் பள்ளியில் ஸ்டாலின் பிறந்தநாள்… முதல் எழுத்தாக இதை எழுதுங்கள்! மாணவர்களிடம் MLA வேண்டுகோள்!

ராஜபாளையம் பள்ளியில் ஸ்டாலின் பிறந்தநாள்… முதல் எழுத்தாக இதை எழுதுங்கள்! மாணவர்களிடம் MLA வேண்டுகோள்!

தமிழ்நாடு முதலமைச்சர் 71 வது பிறந்த முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு உயர்&மேல்நிலைப்பள்ளிகளுக்கு 10000 நோட்டு புத்தகம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

விருதுநகர் மாவட்டடம் இராஜபாளையத்தில் முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் இராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையத்திலுள்ள எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளி & எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கும் நிகழ்வை சட்டமன்ற உறுப்பினர்
தங்கப்பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியிலுள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் 10000 நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

இம்மூன்று பள்ளிகளில் நான் நேரடியாக வந்து நோட்டுபுத்தகம் வழங்குவதை தொடங்கி வைத்தது போல் இதர பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் நோட்டுபுத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நோட்டில் முதல் எழுத்தாக தமிழ் வாழ்க… தமிழ்நாடு வளர்க … தமிழ்நாடு முதலமைச்சர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க… என எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.

அதுபோல் மேலும் நடைபெறயிருக்கும் 10 & +2 தேர்வில் இராஜபாளையம் தொகுதியிலுள்ள அனைத்துப்பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தேர்ச்சி வீதத்திலும் முதல் மதிபெண்ணிலும் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடமும், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடமும், மாவட்டத்தில் இராஜபாளையம் முதல் இடத்தில் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, ஒன்றிய துனை சேர்மன் துரைகற்பகராஜ், சேத்தூர் சேர்மன் பாலசுப்ரமணியன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சக்திவேல், சிவக்குமாரி ,காளியப்பன் கழக நிர்வாகிகள் , ஜெயந்தி, பாரத்செந்தில்குமார் செந்தில் அங்குராஜ் அருள்உதயா ராம்நாத் ஜெயக்குமார் ரவி மற்றும் கழக நிர்வாகிகள் பள்ளி மாணவ மானவியர்கள், ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!