விருதுநகர் அருகே கார் மோதி விபத்து… தீப்பிடித்ததில் ஒருவர் உடல் கருகி பலி.

விருதுநகர் அருகே கார் மோதி விபத்து… தீப்பிடித்ததில் ஒருவர் உடல் கருகி பலி.

விருதுநகர் அருகே கார் மோதி விபத்து… தீப்பிடித்ததில் ஒருவர் உடல் கருகி பலி.

விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் பாலத்தில் மோதியதில் உருண்டு தீப்பிடித்தது. காரில் சிக்கி உடல் கருகி ஒருவர் பலி இருவர் காயம்.

மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் சேர்ந்தவர் சசிக்குமார் (55), இவரது மகன் ரோஹித். இவர்கள் இருவரும் ஒரு காரில் கன்னியாகுமரி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தரைப்பாலத்தில் திடீரென கார் மோதி உருண்டது. இந்த விபத்தில் கார் திடீரென தீப்பிடித்தது. இதில் காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ரோகித் மற்றும் சசிகுமார் ஆகியோரை மீட்டு
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காரை ஓட்டி வந்த நபர் குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!