வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தி தெரிந்த காவலர்கள் நியமனம்

புதிய உதவி எண் அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி மொழி தெரிந்த காவலர் செந்தட்டி என்பவரை நியமனம் செய்து 82493 31660 என்ற புதிய அலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் இன்று (09.03.2023) உத்தரவிட்டுள்ளார்.

வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ குறைகள் இருந்தாலோ மேற்படி செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர் இந்தி மொழியிலேயே பேசி பிரச்சனைகள் என்ன என்பதை கேட்டறிந்து கொண்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையம் மற்றம் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார். சம்மந்தப்பட்ட காவல்ஹ நிலைய போலீசார் அழைப்பு விடுத்த வடமாநில தொழிலாளர் இருக்குமிடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள் எனவும்,வடமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று, அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்குரிய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு காவல்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்

ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!