இடைநின்ற மாணவியை பள்ளியில் சேர்த்த போலீஸ் துணைசூப்பிரண்டு

ஆழ்வார்திருநகரி அண்ணாநகரை சேர்ந்த லோகநாதன் மகள் தாமரைக்கனி. நாசரேத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிப்பு வந்தார். அவரது தாயார் மரணம் அடைந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளியிலிருந்து இடை நின்ற மாணவர்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்தனர். இதில் தாமரைக்கனி பள்ளிக்கு செல்லாமல் இடை நின்றது தெரிய வந்தது. உறவினர் வீட்டில் தங்கி இருந்த தாமரைக்கனியை அழைத்துப் பேசி மீண்டும் அவரைப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை போலீஸ் துணைசூப்பிரண்டு மாயவன் மேற்கொண்டார். அதன்படி அந்த மாணவிக்கு தேவையான பாட புத்தகம், பேக் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார்.நேற்றிலிருந்து அவர் நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பதற்காக மீண்டும் சென்று வருகிறார்.
ஏற்கனவே கருங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆழ்வார்திருநகரி டீக்கடையில் வேலை பார்த்தது வந்தநிலையில், அவரை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. அவரை பொதுமக்கள் பாராட்டி
னர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.