திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சி தஞ்சை சாலையில் 17வது வார்டு பகுதியில் அமைந்துள்ள பூக்கொல்லை தெருவில் போடப்பட்ட பாதாள சாக்கடையில் மேல் மூடப்பட்ட சிமென்ட் மூடி உடைந்து எதிர்பாராமல் தவறி விழுந்த ஒரு வயதான பெண்மணி பலத்த காயங்களுடன் அந்த தெருவாசிகளால் மீட்கப்பட்டார்.
மழை காலங்களில் சாலைகள் பராமரிப்பு பணி நடைபெறாது எனவும் தோண்டப்பட்ட குழிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் பாதுகாக்கப்படும் எனவும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் KN.நேரு அவர்கள் அறிவித்திருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் பல முறை அந்த பகுதியின் ஆளும்கட்சி கவுன்சிலரிடம் இந்த பாதாள சாக்கடை குழிக்கு தீர்வு கேட்டும் இன்று வரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
வார்டில் அடிப்படை வசதிக்கு தேவையான பணிகளை கூட சரிவர செய்யாமல் மெத்தனப்போக்கில் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் திமுக -வை சேர்ந்த 17வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா வார்டு பகுதிக்குள் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.
அவரின் மாமனார் பூக்கடை மோகன் தான் அனைத்து வேலைகளும் செய்கிறார்கள் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு தீர்வே இல்லையா என்று மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
எனவே இதற்கு உடனடியாக சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்ப்பு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.