தூத்துக்குடி: திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் தென்திருப்பேரையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Advertising

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தென்திருப்பேரை நகர கழகம் சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், திமுக அரசின் சொத்துவரி, வீட்டு வரி உயர்வு மின் கட்டண உயர்வு ஆகியவைகளை கண்டித்தும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைப்படி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயகுமார், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ் நாராயணன், தென்திருப்பேரை நகரக் கழக செயலாளர் ஆறுமுக நயினார், மாவட்ட மாணவர் அணி தலைவர் சிவரத்தினம், கந்தன், சாம்ராஜ், வசந்த் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!