வேடம் தரித்த பக்தர்கள்-வெடித்துக் கிளம்பும் குரல்கள், உண்மையான கலாச்சாரத்தை நோக்கிய குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா

குலசையில் பெருந்திரளாகக் கூடுகிற பக்தர்களின் ஆசைகள், நம்பிக்கைகள், ஏக்கங்கள் இவை எல்லாமுமாக இணைந்து ஒவ்வொரு வீதியிலும் இறங்கி வேடமிட்டுக் கொள்கிறன. ஆவேசம் கொண்டு அவை நடக்கத் துவங்கும் போது சொல்லப்படாத பல கதைகள் வீதியுலா வருகின்றன.

இந்தப் பக்தர்கள் எல்லோரையும் ஏற்றுக் கொண்டு வாழ்விலும், கனவிலும் கலந்துவிடுகிற சிறு தெய்வங்களின் மொத்த வடிவமாக குலசை முத்தாரம்மன் காட்சியளிக்கிறாள். மூதாதையர்களின் நினைவுகளிலிருந்து நீட்சி பெறும் பிணைப்பாக இவ் வழிபாட்டு முறையைச் சொல்லலாம்.

வேடம் தரித்த பக்தர்களின் வெடித்துக் கிளம்பும் குரல்கள், உண்மையான கலாச்சாரத்தை நோக்கிய அறைகூவல்களாக இருக்கின்றன. தெய்வம் அவர்களைப் புறந்தள்ளுவதில்லை. இது இன்பத்திலும், துன்பத்திலும் பங்கெடுக்கிற தெய்வத்திற்கான மண் சார்ந்த வழிபாடு. இந்த உறவை அத்தனை சுலபமாக விளக்கிவிட முடியாது.

கடற்கரையோரம் அக்னிச் சட்டிகளின் குவியலில் பெருநெருப்பு மேலெழுந்து எரிந்து கொண்டேயிருப்பதைக் காண முடியும். உண்மையில் அந்த இடத்தில் நிலவிக் கொண்டிருப்பது வெறும் அமைதியல்ல. மயான அமைதி!

நன்றி:- இரா.குண அமுதன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!