
பழங்குடி சான்று கேட்டு அலைந்து வெறுத்துப்போன பெரியசாமி என்ற முதியவர், தன் ஆதார் கார்டையும் பிற ஆவணங்களையும் அருகில் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டாரத்தில் 11 கிராமங்களில் வாழும் கொண்டரெட்டி பழங்குடிகளுக்கு ஜாதி சான்று கேட்டு தொடர்ந்து போராடிய பெரியசாமி நேற்று இரவு வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள மரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொண்ட ரெட்டிகள் மட்டுமல்ல, குடுகுடுப்பைக்காரர் தொடங்கி இருளர்கள் வரை பலரும் ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு பழங்குடி தன் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணம் கேட்டுப் போராடி இறுதியில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றதற்காக நிர்வாக அமைப்பு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.