குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு! வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் மாயம்.

இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இன்னுமே கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் 19,20 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில், தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (17) அடித்துச் செல்லப்பட்டார். தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுவனைத் தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் தனது குடும்பத்தாருடன் குளித்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அவர் அடித்து செல்லப்பட்டார். பல சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் குளித்து கொண்டு இருந்த நிலையில், திடீரென வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்கள் பலரும் அலறி அடித்து ஓடினார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!