
*தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழகத்தில் திரையிட கூடாது திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இஸ்லாமியர்களை தீவிராவாதிகளாக சித்தரித்தும் , அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் இஸ்லாம் குறித்து மிக அவதூறாக எடுக்கப்பட்டுள்ள “தி கேரளா ஸ்டோரி” திரைப்படைத் தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க கூடாது என்றும், அந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேனி மாவட்டம் முழுவதும் அந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது எனவும்.
இன்று 04.05.2023 வியாழக்கிழமை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் அவர்களிடம் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் சார்பில் மெளலவி சையது இஸ்மாயில் உலவி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட நிர்வாகிகள்..இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், SDPI, IMMK, கிறஸ்திவ நல்லிணக்க பேரவை, சமூக நல்லிணக்க பேரவை, பிறர் நலம் நாடுவோம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தேனி மாவட்டத்தில் எந்த இடத்திலும் அந்த திரைப்படம் திரையிட வில்லை எனவும் இந்த மனுவை அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாக கூறினார்.தமிழக அரசு உடனடியாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் அந்த திரைப்படம் தமிழ் நாட்டில் திரையிட அனுமதிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.