
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சுயேட்சையாக களம் இறங்கும் நபர்கள் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ள ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசத்தை காண்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளரான பரமசிவன் (எ) பந்தல் ராஜா கப்பல் சின்னத்தில் போட்டியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் யாதவர் மகா சபையின் மாநில இளைஞரணி செயலாளர் கம்பம் விஜயசாரதி தலைமையில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் அவர்களை நேரில் சந்தித்து தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் S.பரமசிவன் @ பந்தல் ராஜா அவர்களுக்கு ஆதரவையும், தேனி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றிக்காக முழுமையாக களப்பணி செய்வதாகும் தெரிவித்தனர்.

உடன் தேனி மாவட்ட தலைவர் கிருஷ்ணப்பா, தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் G.கல்லுப்பட்டி சதீஷ், தேனி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முருகன் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவரணி இணைச் செயலாளர் சீலையம்பட்டி தர்மா மற்றும் தேனி நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் தஞ்சை யோகேஷ், தேனி ராஜா, பெரியகுளம் நாகராஜ் மற்றும் பலரும் இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.