
சுட்டெரிக்கும் வெயிலில் VMK வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக சுயேட்சையாக போட்டியிடுகின்ற S.பரமசிவன் (எ) பந்தல் ராஜா உத்தமபாளையம் வேளாளர் பெருமக்கள் சங்கத்திடம் ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் பொதுமக்களிடம் வேட்பாளர் தனது குடும்பத்தினருடன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பரபரப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது தேனி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு, இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும், இயற்கை வளங்களை பாதுகாத்திடவும் கப்பல் சின்னத்தில் வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.