
சிவகங்கையில் நடப்பது என்ன? திணறும் கார்த்திக் சிதம்பரம்!
இளைஞர் ஒருவர் 2019-ல் இப்படித்தான் ஓட்டு கேட்டு தொகுதிக்கு வந்தீங்க அப்புறம் ஆளவே காணோம், கொரோனா அப்ப எங்க போயிருந்தீங்க என அடுக்கடுக்கான கேள்விகளை கார்த்திக் சிதம்பரத்திடம் முன்வைக்க திணறிப் போன கார்த்திக் சிதம்பரம் நீ யாருப்பா எந்த ஊரு உனக்கு இப்ப என்ன பிரச்சனை என்று ஓட்டம் பிடித்த சம்பவம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கின்றது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள், புதுவையில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. அந்தந்த கட்சிகளின் அரசியல் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் , முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. இதில் அதிமுக வேட்பாளராக சேவியதாஸ், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேவநாதன் யாதவ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி மற்றும் இதர சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், திருமயம், ஆலங்குடி ஆகிய ஆறு தொகுதிகளில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சிவகங்கை நாடாளுநாடாளுமன்றதொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தேவகோட்டை பகுதியில் திறந்தவெளி வேனில் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் 2019-ல் இப்படித்தான் ஓட்டு கேட்டு தொகுதிக்கு வந்தீங்க அப்புறம் ஆளவே காணோம், கொரோனா அப்ப எங்க போயிருந்தீங்க என அடுக்கடுக்கான கேள்விகளை கார்த்திக் சிதம்பரத்திடம் முன்வைக்க திணறிப் போன கார்த்திக் சிதம்பரம் நீ யாருப்பா எந்த ஊரு உனக்கு இப்ப என்ன பிரச்சனை..,
அந்த இளைஞரை பார்த்து இப்படி எல்லாம் பேசக்கூடாது என்றார். அதற்கு பதில் கொடுத்த இளைஞர் இப்ப எதுக்கு வந்தீங்க என்றார். இதனைக் கண்ட கூட்டத்தில் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் இளைஞரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க.. ஏண்டா தேவகோட்டைக்கு வந்தோம்னு கார்த்திக் சிதம்பரம் தலையில் அடித்துக் கொண்டு பிரச்சாரத்தை முடித்துவிட்டு கிளம்பினார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதே போல் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் வெள்ளக்கரை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற கார்த்திக் சிதம்பரத்திடம் பொதுமக்கள் இதுவரை என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்க்கு வாக்காளரே ஒருமையில் பேசிய ஒன்றிய செயலாளர் சேங்கைமாறனின் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவம் பாஜகவினருக்கும், அதிமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் அல்வா சாப்பிட்டது போல் இருந்தது. இந்த சம்பவத்தை தொகுதி முழுவதும் அல்ல இந்தியா முழுவதும் அனைத்து கட்சி ஐடி விங் கையில் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.