வெற்றி உனக்கு தான்.. அதிமுக வேட்பாளரிடம் சாமியாடி அருள் வாக்கு கூரிய மூதாட்டி.
சிவகங்கை மாவட்டம், திருப்புவணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அந்த கிராம மக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்ச்சாக வரவேற்பளித்தனர். அச்சமயம் அதே ஆரத்தி தட்டை வேட்பாளர் தானே வாங்கி வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்து சால்வை அனிவித்து வாக்கு சேகரித்தார்.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிக்கையில் அதே கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டியான மூக்கம்மாள் என்பவரிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது அவர் திடிரென அருள் வந்து சாமியாடி நீதான் சாமி வெற்றி பெருவாய் என அருள்வாக்கு கூறினார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.