சூரிய கிரகணத்தில் நிகழ்ந்த அதிசயம்: செங்குத்தாக நின்ற உலக்கை & அம்மிக்கல்.. மக்கள் ஆச்சர்யம்!

தமிழகத்தில் சூரிய கிரகணத்தை கண்டறிய நெல்லை, வேலூர், கொடைக்கானல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அறிவியல் ஆய்வுக் கூடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் சூரிய கிரகணத்தை கண்டறிய நாகல்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த எழுபத்தி ஐந்து வயதான மூதாட்டி நாகரத்தினம் தனது வீட்டு வாசலில் உலக்கை மற்றும் நாணயங்களை வைத்து பொதுமக்கள் சூரிய கிரகணத்தை கண்டறியும் படி செய்திருந்தார்.உலக்கையின் அடிப்பகுதி தட்டையாக இல்லாததால் அதை செங்குத்தாக எந்தப் பிடிமானமும் இன்றி நிறுத்தி வைக்க முடியாது. எனினும், சூரிய கிரகணத்தின்போது உலக்கை செங்குத்தாக நிற்கும். பழைய காலத்தில் கிராமங்களில் சூரிய கிரகணம் நிகழ்வதை கிராவிட்டி ஃபோர்ஸ் ( புவி ஈர்ப்பு விசை) தத்துவத்தின் கீழ் உலக்கையை செங்குத்தாக நிறுத்தி கண்டறிவார்கள்.

கிரகணம் முடிந்தவுடன் இந்த உலக்கை தானாகவே கீழே விழுந்துவிடும். இந்நிலையில் நேற்று சூரிய கிரகணம் மாலை 5.14 நிமிடத்திற்கு துவங்கி 6.10 வரை 56நிமிடங்கள் நீடித்திருந்தது. சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் வெளியே வராமல் இருந்தால் கதிர்வீச்சின் மூலம் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், இந்த நேரத்தில் உணவுகள் உண்டால் செரிமான சக்தி ஏற்படாமல் உடல் உபாதைகள் ஏற்படும் எனவே உணவுகள் உண்ணாமலும் அறிவியல் ரீதியாகவும் இதை கடைபிடித்தால் உடலை காத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டு வந்தது.அதுபோல் உலக்கையையும் நிற்க வைத்திருந்தனர். அம்மிக் கல், உலக்கையின் முனைகளும் தட்டையாக இருக்காது.

அம்மியில் கூம்பு வடிவாகவும் உலக்கையின் முனை நிற்க வைக்க முடியாத படியும் இருக்கும்.இது போல் கிரகணத்தின்போது நிற்க வைக்கப்படும் அம்மிக்கல்லும் உலக்கையும் கிரகணம் முடிந்த பிறகு தானே கீழே விழுந்துவிடும். இந்த நிகழ்வை பல்வேறு தரப்பினர் பார்த்து ரசித்தனர்.

தமிழகத்தில் மீண்டும் சூரிய கிரகணம் வரும் 2031-ஆம் ஆண்டு ஏற்படும். அச்சமயம் தேனி உள்ளிட்ட பகுதிகளில் முழு கிரகணத்தை காணலாம். அதோடு 60 ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் தமிழகத்தில் நடக்கும் என்பதால் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதேபோல ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ள சாயல்குடியில் ஐயப்பன் என்பவரது வீட்டில் கிரகணம் துவங்கியபோது நிற்க வைக்கப்பட்ட அம்மிக்கல், சூரிய கிரகணம் முடியும வரை நின்றது. அதன் பிறகு கிரகணம் முடிந்தவுடன் தானாக கீழே விழுந்ததாக தெரிவித்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இதுபோல உலக்கை மற்றும் நாணயங்களும் நிற்க வைத்து சூரிய கிரகணத்தை கண்டு வந்தனர் இதனால் பொதுமக்கள் பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!