
நாடு முழுவதும் கூம்பு வடிவான ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் இந்து தேசிய கட்சியினர் வலியுறுத்தல்…
சட்டம் அனைவருக்கும் பொது..நாடு முழுவதும் கூம்பு வடிவான ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் இந்து தேசிய கட்சியினர் வலியுறுத்தினர்.
நாடு முழுவதும் கூம்பு வடிவான ஒலிபெருக்கிகளை அகற்ற கூறி உச்சநீதிமன்றம் கூறியதை தொடர்ந்து தமிழக அரசும்,காவல்துறையும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரிய செயல் என்று இந்து தேசிய கட்சியினர் மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் இது விரைவில் அகற்றாவிட்டால் இந்து தேசிய கட்சியின் சார்பில் ஓரிரு வாரங்களுக்குள் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அகற்றும் நடவடிக்கையை இந்து தேசிய கட்சி மேற்கொள்ளும்., ஏனெனில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது அதனை நாங்கள் மதிக்கிறோம்.
சிறுபான்மையினரும், கிறிஸ்தவர்களும் இதனை கடைபிடிக்க தவறுகின்றனர் என்று இந்து தேசிய கட்சியின் மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா கூறினார்.மாவட்ட தலைவர் உதயகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் வீராச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.