
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கொள்ளுத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் வயது 65 அவர் இரவு நேரத்தில் வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருக்கும்பொழுது , ஆபாச வார்த்தைகளில் பேசி, அவரை ஐயப்பன் முத்து காமாட்சி இருவரும் மது மற்றும் கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார்கள்,அந்த நேரத்தில் அந்த முதியவரை அடித்து பக்கத்தில் கிடந்த குளத்துக்குள் தூக்கி போட்டு இருக்கிறார்கள், குளத்துக்குள் போட்டு அடிக்கிறார்கள் அதன் பிறகு அவர் உறவினர் வந்து வழிமறித்த பின்பு அங்கு கிடந்த கட்டையால் அடித்து மண்டை உடைக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் அவருக்கு 11 தையல் போடப்பட்டிருக்கிறது.

நேற்று இரவு 11 மணிக்கு அரசு மருத்துவமனை மணமேல்குடியில் சேர்க்கப்பட்டிருக்கிறார், இன்று வரையிலும் FIR போடவில்லை,குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, போதை விழிப்புணர்வு முகாம் நடத்திக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்…. சர்வ சாதாரணமாக கிருஷ்ணாஜி பட்டினம் ,மணமேல்குடி பகுதியில் கஞ்சா புழக்கத்தில் உள்ளது நடவடிக்கை எடுக்கப்படுமா…,?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.