இறந்தவர் உடலை ஊர் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு.. திராவிட மாடல் ஆட்சியின் அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் வீரமங்கலத்தில் வயது முதிர்வின் காரணமாக கந்தையா(70) என்பவர் இறந்து விட்டார். அவர உடலை வாகனத்தில் எடுத்து சென்றபோது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தார்ச்சாலையில் இடுகாட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என அங்குள்ள மக்களில் ஒரு சமூகத்திரால் தடுக்கி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாடை கம்பு கட்டி வயல்வெளியில் தூக்கிச் செல்லுங்கள் எனவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து இறந்தவரின் உடலை இவ்வழியே கொண்டு சென்றால் ஊருக்கு தீட்டுப்பட்டுவிடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர் .இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. RDO உட்பட அரசு அதிகாரிகள் இரு கிராம மக்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் அக்கிராம மக்கள் ஊருக்குள் உள்ள சாலை வழியாக கொண்டு செல்ல தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பல மணி நேரம் ஆகியும் தற்போது வரை முதியவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி இன்னும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக நீதி பேசும் திராவிட ஆட்சியில் இது போன்ற கொடுமைகள் அரங்கேறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது எனவும் இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா என்று அரசியல் விமர்ச்சகர்களும்,சமூக ஆர்வலர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!