பெற்றோரை வீட்டை விரட்டி விட்ட மகன்கள்..சொத்தை ரத்து செய்து பெற்றோரிடம் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம்

சொத்துக்களை பெற்றுக் கொண்டு பெற்றோரை வீட்டை விட்டு, துரத்திய மகன்களின் தான செட் டில்மென்டை ரத்துசெய்து ஆர்டிஓ உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. .

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே கண்டியதேவன் பட்டி கிழக்கு தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி(65). இவர், மனைவி மற்றும் மகன்கள் அன்னக்களஞ்சியம்,தங்கப்பாண்டி ஆகி யோருடன் வசித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு தனது வீடு மற்றும் சொத் துக்களை தனது மகன்கள் 2 பேருக்கும் தான செட்டில் மென்டில் எழுதி கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்குமுன்பு,மகன் கள் எங்களை பராமரிக்க வில்லை. சொத்துக்கள் அவர்கள் பெயரில் உள்ளதால் என்னையும், என் மனைவியையும் வீட்டைவிட்டு துரத்தி விட்டனர். இப்போது நாங்கள் உண விற்கு கூட வழி யின்றி தவித்து வருகிறோம் என வில்லூர் போலீஸ் நிலை யத்தில் சுப்பிரமணி புகார் அளித்தார். இதுகுறித்து பேரையூர் டி.எஸ்பி மதியழகன் உசிலம்பட்டி ஆர்டிஓ-விற்கு பரிந்துரை செய்தார்.

இதனை விசாரித்த உசிலம்பட்டி ஆர்டிஓ ராஜ்குமார், முதியோர் பராமரிப்பு நலச்சட்டம் 2007 பிரிவு 4 மற்றும் பிரிவு

23ன் படி சுப்பிரமணி. தனது மகன்களுக்கு எழுதிக்கொடுத்த தான சென்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்தார். மேலும் வில்லூர் போலீசாருக்கு அன்னக்களஞ்சியம் வைத்திருக்கும் வீட்டை ஒரு மாதத்திற்குள் காலி செய்து பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தர விட்டார். இந்த உத்தரவு இப்பகுதியிலுள்ள பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!