வடிவேல் காமெடியாக திமுக ஆட்சி… நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவது ஏன்? -வி.வி.ஆர் கேள்வி

சமீபத்தில் இதே மாதிரி விமான நிலையத்தில் திமுக அமைச்சர் பிடிஆர் மீது காலணி வீசியது தொடர்பாக காவல்துறையினர் தாமாக முன்வந்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஒரு முன்னாள் முதல்வருக்கு மதுரை விமான நிலையத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இதுவரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய தயங்கி வருகின்றனர்.

மதுரை விமான நிலையம் வந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரவாக பேசியதாக அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் என்பவர் மீது கூறி அதிமுக சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவனியாபுரம் காவல்துறை உதவி ஆணையர் செல்வகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்: மதுரை வந்த முன்னாள் முதல்வரை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டும் இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது தமிழக அரசு மற்றும் திமுகவின் பீ டீம் இன் தூண்டுதலத்தில் நடைபெற்றதாக தெரிகிறது. சமீபத்தில் இதே மாதிரி விமான நிலையத்தில் திமுக அமைச்சர் பிடிஆர் மீது காலணி வீசியது தொடர்பாக காவல்துறையினர் தாமாக முன்வந்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஒரு முன்னாள் முதல்வருக்கு மதுரை விமான நிலையத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இதுவரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய தயங்கி வருகின்றனர். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி யார் திமுக அரசை விமர்சனம் செய்வதால் பீ டீமை கையில் வைத்துக் கொண்டு திமுக செயல்படுகிறார்கள். வடிவேல் சொல்வது போல் உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல் உள்ளது. ஒரு கட்சியின் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் இது அதிமுக தொண்டர்களை அச்சுறுத்துவது போல் திமுக செயல் படுகிறது அதற்கு காவல்துறை துணை நிற்கிறது. முதல்வரிடம் நேரடியாக பேசிவிட்டு அதன் பிறகு தான் நடவடிக்கை எடுப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மோசமான சூழ்நிலை இப்போது நடைபெற்று வருகிறது இதை தட்டி கேட்க மக்கள் தயாராகி வருகிறார்கள். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!