
ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு இந்திய மக்களின் மிகப்பெரிய மோகங்களில் ஒன்றாகி விட்டது ஆங்கிலத்தில் பேசுவது என்பது.
தமிழில் பேசுபவர்கள் தங்கிலீஷில் பேசுவது போல் தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களின் மொழிகளிலும் ஆங்கிலம் ஒன்றாக கலந்து பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் ஆங்கில மோகம் என்பது பெரும் அறிவு பகட்டு என அனைவரும் நினைப்பதே இதன் காரணம். அப்படி அல்ல என தெருவோர பெண் வளையல் வியாபாரி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
இந்தியாவில் மிக பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று கோவா . இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். இங்கு அமைந்துள்ள ரம்மியமான வகேட்டர் கடற்கரையில் வளையல் விற்கும் பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவை சுஷாந்த் பாட்டீல் தனதுஇன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் வளையல் விற்கும் பெண் ஒருவர் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். கொரோனாவுக்கு பிறகு கோவா கடற்கரையின் மாற்றம் குறித்து சரளமாக ஆங்கிலத்தில் தெரிவிக்கிறார்.. அதன்படி இந்த வாகடர் கடற்கரை கறுப்பு பாறைகள் மற்றும் அழகிய நீருக்கு பெயர் பெற்றது. கோவாவின் அதிக நெரிசலான கடற்கரைகளுக்கு மத்தியில் அமைதியான இடத்தை தேடுபவர்களுக்கு இது சொர்க்க பூமியாக திகழ்கிறது. இந்த பெண் வளையல்கள் மற்றும் மணிகள் கொண்ட நெக்லஸ்களை விற்பனை செய்கிறார். அத்துடன் கடற்கரையின் மாறும் நிலப்பரப்பு குறித்தும் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறார்.
இந்த வீடியோவுக்கு கமெண்ட்களும், லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன. சுமார் 828,000 க்கும் அதிகமானோர் இந்த வீடியோவில் வரும் பெண்ணுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அந்த பெண்ணின் ஆங்கில மொழிப் புலமையை கண்டு நெட்டிசன்கள் தங்கள் வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் தங்களை விட அந்த பெண் நன்றாக ஆங்கிலம் பேசுவதாகவும், தங்களுக்கு கல்வி மீது சந்தேகம் வருவதாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான் அது அறிவு இல்லை என்பதை இந்த பெண் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.