
விமான கழிவறைக்குள் மூன்று தங்க கட்டிகள் பறிமுதல்; புதுடெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு
இந்தியா, புது டெல்லியிலுள்ள, இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் வந்திறங்கிய, விமானம் ஒன்றின் கழிவறையிலிருந்து 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று தங்க கட்டிகளை, அந்நாட்டு சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
உளவு தகவலின் அடிப்படையில், இம்மாதம் 17- ஆம் தேதி, அனைத்துலக பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருந்த விமானம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அச்சோதனையின் போது, விமான கழிவறையிலுள்ள, நீர் பாய்ச்சும் தொட்டியில் அந்த தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஆயிரத்து 400 கிராம் எடையிலான அந்த தங்கக் கட்டிகளை கடத்திய, கும்பலை அடையாளம் காண விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.