திறந்தவெளியில் குவிந்து கிடக்கும் நெல்…கண்டுகொள்ளாத அதிகாரிகள்..விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில்
ஆண்டுதோறும் நெல் அறுவடை காலங்களில், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அந்தந்த பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ஒரு அலுவலர், கிளர்க், மற்றும் காவலாளி ஆகியோர் நியமிக்கப்படுவர். பின்னர் நெல்லை எடை போட்டு மூட்டையாக கட்டி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒரு வார காலத்திற்கு பிறகு விவசாயிகளுக்கு நெல்லிற்கான தொகையை வழங்குவார்கள்.

தற்போது அறுவடை செய்த விவசாயிகளிடன் பட்டா, சிட்டா ஆகிய ஆவணங்களை பெற்றுச் சென்றும் 10 நாட்களுக்கு மேலாகி இதுவரையும் நெல் கொள்முதல் செய்ய யாரும் வரவில்லை. மாதக்கணக்கில் உழைத்து, போராடி அறுவடை செய்த நெல் மணிகளை 10 க்கு 10 நாட்களுக்கு மேலாக நெல்மணிகளை குவித்து வைத்து உணவின்றி, உரக்கமின்றி, இரவும்,பகலுமாக காத்திருப்பதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உணவுத்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!