
கப்பலூர் NHAI சுங்கச்சாவடி… கட்டணம் வசூலிப்பது மட்டும் தான் குறியா! இதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.?
மதுரை அருகே, கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலையில், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, பலமுறை ஜல்லி கற்களை, இதுபோன்று நடு ரோட்டில் சிதறி விட்டு செல்கின்றனர். இதனால், வாகன விபத்து ஏற்பட நேரிடும், சாலையில் சிதறிய சிமென்ட் கற்களை இந்திய நெடுஞ்சாலைத்துறையினரும் சுங்கச்சாவடி நிர்வாகமும் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் அக்கறையை சாலையில் நாய்கள், விலங்குகள் இறந்து கிடந்தாலும் அதை அப்புறப்படுத்த முன்வர வேண்டும். மேலும் அணுகுசாலையின் பக்கவாட்டு பகுதியில் மண் நிரப்பப்படவில்லை. இதனால் பேருந்து நிறுத்தம் அருகே மழைநீர் தேங்கியும், உள்ளூர் சாலையில் இருந்து அணுகுசாலையை கடக்கும்போது இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சாலையில் சறுக்கி நிலைதடுமாறி விபத்து ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. NHAI மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், மதுரை புறநகர் பகுதிகளில், பல ஊர்களில் லாரிகளில் தென்னை மட்டை, குவாரிகளிலிருந்து ஜல்லிக் கற்கள், ஜல்லி தூசிகள், மண்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்பாய் போட்டு மூடாமல் கொண்டு செல்வதால், லாரிகள் பின்னால் எந்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத வகையில் தூசி பறப்பதுடன், சாலையில் கற்கள் சிந்தி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மதுரை நகர், புறநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், லாரிகளில் தார்பாய் இன்றி, செங்கல், மணல், கற்கள் கொண்டு செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.