இனி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் இலவச லட்டு பிரசாதம்!

இனி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் இலவச லட்டு பிரசாதம்!

‘லட்டு’ என்றாலே முதலில் பலருக்கு நினைவில் வருவதும் திருப்பதி தான். அதாவது, திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக சுவை மிகுந்த லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலிலும், அம்மாள் மீனாட்சியை தரிசித்து வரும் பக்கதர்களுக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மதுரையில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வரும்பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு காணொலி மூலம் இன்று அழகர்கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல் ஏ. வுமான கோ.தளபதி பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலை துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையாளர் சுரேஷ், மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், மற்றும் 99 வது வார்டு கவுன்சிலர் உசிலை சிவா ஆகியோர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டுகளை வழங்கினார்.

ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அழகர் கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

மதுரையில் மட்டும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக 3 கோவில்களில் இலவச லட்டு பிரசாதம் ஆனது நாள் முழுவதும் அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:போட்டகிராபர் கார்த்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!