திருப்பரங்குன்றம் அருகே பல்வேறு கோணங்களில் தேவர் ஜெயந்தி விழா
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குக்கிராமங்கள் முதற்கொண்டு தேவர் ஜெயந்தி விழா முன்னெடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதி சுற்றி பல்வேறு விதமான கோணங்களில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வாழ்ந்து மறைந்த திருநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கொண்டாடினர்,
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருஉருவ சிலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியச துணைச்செயலாளர் மகாமுனி , உசேன் , ராஜவடிவு , நாகஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் திருவுருவசிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
தோப்பூர் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும்,தீபாராதனை நடத்தியும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது.

சதுர்வேதமங்கலம் என்ற கூத்தியார்குண்டு கிராமத்தில் மந்தை திடலில் தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.