Tasmac shops: சித்திரைத் திருவிழா2023 – டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்… மாவட்ட ஆட்சியருக்கு மனு!

மதுரை சித்திரை திருவிழாவில் குற்ற சம்பவங்களை தடுக்க 5 நாட்கள் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் புகார் மனு அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரிடம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் அளித்த புகார் மனு அளித்துள்ளார். அதில், மதுரை நகரில் உலக புகழ் வாய்ந்த சித்திரை திருவிழா மே 5ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குகின்ற வைபவம் தொடங்கி மே 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் மீது பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். எனவே வருகின்ற மே 5 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை முட உத்தரவிட வேண்டும்.

மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்கின்ற ஊழியர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்திரை திருவிழாவில் கடந்தாண்டை போன்று உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. அப்போது விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மகளிரணி தலைவி மீனா, மற்றும் பாஜக அனைத்து நிர்வாகிகள் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!