கேஸ் குடோன் அருகே பற்றி எரிந்த தீ… விரைந்து வந்த தீயணைப்புத் துறையினராால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மதுரை மாவட்டம் மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள அரசினர் மாணவர் விடுதி அருகே எரிவாயு சிலிண்டர் குடோன் உள்ளது. இதன் அருகே உள்ள திறந்த வெளிமுள்புதர்கள் மற்றும் குப்பைகள் அடர்ந்த வெளிப்பகுதியில் திடீரென தீயானது பற்றி எரிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் வேறு சில வீடியோவை காண: கள் ஒரு போதைப்பொருளா?
எதிரே அடுக்குமாடி அருகில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் தகவல் அளித்ததன் பேரில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் பாலமுருகன் தலை மேலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீய அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நேற்றைய தினம் இதே பகுதிக்கு அருகில் கார் உதிரி பாகங்கள் இருக்கக்கூடிய நிறுவனத்தில் தீ பற்றி எரிந்தது குறிப்பி
டத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.