மதுரை திருப்பரங்குன்றம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் 2 வாலிபர்கள் உடல் கண்டெடுப்பு., உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையின் மேல் தண்டவாளத்தின் 2 வாலிபர்கள் உடல் கண்டெடுப்பு., உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் தண்டவாளத்தின் அருகே 2 நபர்களின் இடது பக்கம் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த வாலிபர்கள். உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் இறந்தவர்கள் யார் எனவும்.? தற்கொலை செய்து கொண்டார்களா.? அல்லது தவறி விழுந்தார்களா.? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையின் மேல் செல்லும் இரயில் தண்டவாளத்தின் அருகே இரண்டு ஆண்கள் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து வந்த மதுரை ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி சோதனை செய்தபோது இருவரும் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும்., இறந்தவர்கள் இருவருக்கும் இடது பக்க முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தனர். இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்தபோது இறந்தவர்கள் விபரம் தெரியவில்லை. தொடர்ந்து., உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் இறந்தவர்கள் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்களா.? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா.? எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாத்தூர் அருகே ரயில் கதவின் அருகில் சண்டையிட்டு இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் போல் இவர்கள் இருவரும் சண்டையிட்டு தவறி விழுந்து இறந்தார்களா.? அல்லது வேறு ஏதும் காரணமா.? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த வாலிபர் ஒருவரின் வலது கையில் அபிராமி என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து., இறந்தவர்கள் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். ரயில்வே தண்டவாளத்தின் அருகே முகம் சிதைந்த நிலையில் இரண்டு வாலிபர்கள் இறந்து கிடந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!