
அனல் பறக்கும் தேர்தல் களம்… ஒரே மேடையில் மு.க ஸ்டாலின், ராகுல் காந்தி பிரச்சாரம்!
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் வரவேற்பளித்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி புறப்பட்டு சென்றார். இந்தியா கூட்டணி சார்பில் இன்று மாலை திருநெல்வேலி பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோவை செட்டிபாளையம் எல். அண்டு டி பைபாஸ் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.