மது போதையில் காரை ஓட்டி வந்த டிரைவர்… போலீசாருக்கு போக்குக்காட்டியதால் பரபரப்பு.

மதுரையில் மது போதையில் காரை ஓட்டி வந்த நபர் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து; சுமார் இரண்டு மணி நேரம் போலீசாரை போக்குக்காட்டிய போதை ஆசாமி

மதுரை காளவாசல் பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி வந்த மேல மாசி வீதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் எல்ஐசி ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இன்று இரவு அளவுகதிகமான மது போதையில் தனது நான்கு சக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டிச் சென்று அப்பொழுது பழங்காநத்தம் இருந்து காளவாசல் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அதிவேகமாக காரை ஓட்டி வந்த பிரித்விராஜ் என்பவரை அங்கிருந்து அவர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் போதை அளவிடும் கருவிகொண்டு சோதனை செய்ய முற்பட்டபோது சுமார் 2 மணி நேரம் போலீசாரை போக்குக்காட்டி வந்துள்ளார். ஒரு வழியாக பிரீத் அனலைசர் மூலமாக மது அளவு கண்டறியும் சோதனையில் சுமார் 253 என மது போதை அளவு காட்டியது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை திடீர் நகர் போக்குவரத்து போலீசார் காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!