மதுரையில் மீண்டும் எகிறும் வைரஸ் காய்ச்சல்: 2 நாட்களாக 40 சதவீதம் அதிகரிப்பு.

மதுரையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வைரஸ் காய்ச்சல் பரவல் வேகம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

சுகாதாரமற்ற குடிநீரால் டைபாய்டு, மஞ்சள் காமாலை பரவலும் அதிகரித்து வருகிறது.

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் தினமும் 250 குழந்தைகள் புறநோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 நாட்களாக 350 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இது 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

தினமும் 30 முதல் 35 பேர் வார்டில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
இது அரசு மருத்துவமனைக்கான புள்ளிவிபரம் மட்டுமே.

நுாற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் 177 காய்ச்சல் முகாம்கள் மூலம் 10ஆயிரத்து 421 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 48 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் நுாற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு புறநோயாளியாக, உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களின் புள்ளிவிபரங்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை.

இவற்றை ஒப்பிட்டால் உண்மையான வைரஸ் காய்ச்சலின் எண்ணிக்கை கணக்கில் வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!