மதுரை மாவட்டம் கரிமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட குருதியேட்டர் அருகே உள்ள வைகை ஆற்றில் உடம்பில் வெட்டுக் காயங்களுடன் கையில் கட்டுப் போட்டவாறு ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன.
இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிமேடு போலீசார் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கை, கால் காயங்களுடன் கையில் கட்டுப் போடப்பட்டுள்ள நிலையில் சடலம் இருப்பதால், கொலை செய்யப்பட்டு அதன் பின்பு சடலம் ஆற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்றும், அல்லது தற்கொலையா எனவும், எந்தப் பகுதியிலிருந்து ஆற்றில் அடித்து வரப்பட்டார் எனவும், இறந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆற்றில் மீட்கப்பட்ட சடலத்தின் வெட்டுக்காயங்களுடன் தோலுரிந்த நிலையில் இருப்பதால் உடலிலும் அடையாளம் கண்டறிய முடியாத நிலை உள்ளது.
முன்விரோதம் காரணமாக இறந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.