மதுரையில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

தென்னை விவசாயம் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி தென்னை விவசாயசங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்னை விவசாயசங்க மாவட்ட தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமை தாங்கி தேங்காய் உடைக்கும் போராட்டத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் நாகேந்திரன், தென்னை விவசாயம் சங்க மாநில குழு உறுப்பினர் முத்து பேயாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

போராட்டத்தின் போது கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரை அளவை 290 கிலோவில் இருந்து 900 கிலோவாக உயர்த்த வேண்டும். தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். கேரளத்தைப் போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிலோ ரூ.50க்கு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!