
தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து இப்படத்தில் தான் விஜய்யுடன் யுவன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து லைலா, சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

படப்பிடிப்பு புகைப்படம்
இந்த நிலையில், GOAT படத்தின் படப்பிடிப்பில் இருந்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. அதே சமயத்தில் இரண்டாவது பாடலுக்கான அறிவிப்பை வெளியிடுங்கள் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.