மதுரை திருப்பரங்குன்றம் அருகே பிரபல சினிமா ஒளிப்பதிவாளரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

இந்தியத் திரைப்படத்தின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான R.வேல்ராஜ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டு எனும் சிற்றூரில் 1969 அக்டோபர் 21 ம் தேதியில் பிறந்தார்..

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் வேல்ராஜ். ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் அறிமுகமான இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தனுஷ் – சமந்தா நடித்த தங்கமகன் படத்தையும் இயக்கிய இவர், அசுரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களுக்கும் வேல்ராஜ் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வரும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்கள் ஒளிப்பதிவு செய்த அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் -ஐ மக்கள் பார்வையில் அசுரனாகவே பிரதிபலித்தது வேல்ராஜ் அவர்களுக்கே பெரும் பங்கு உண்டு. மேலும் சூரி நடித்து வெளியான விடுதலை திரைப்படம் வெற்றி பெற்றதில் வேல்ராஜ் அவர்களின் கடின உழைப்பு தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என பட்டிமன்றப் பேச்சாளரும் முனைவருமான கு.ஞானசம்பந்தன் அவர்கள் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு புகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் பிறந்தநாளன்று சினிமா துறையினர், அரசியல் பிரமுகர்கள் ,கலைத்துறை ரசிகர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் அமைந்துள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்க்கப்பட்டோர்கள் மற்றும் முதியோர்களை பாதுகாக்கும் மையமான செஷையர் இல்லத்தில் இனிப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு உடமைகளை வழங்கி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையை சேர்ந்த திரைப்பட நடிகர் கே.வெங்கடேசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். உடன் செஷையர் இல்லத்தின் பொறுப்பாளர்கள் முத்துராஜ் மற்றும் கோட்டக் காளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!