மதுரை சித்திரைத் திருவிழா சுவாமி வீதி உலா பாதியில் முடித்துக்கொண்டனர் – இடி மின்னலுடன் கொட்டிய கோடை மழையால் நேர்ந்த நிகழ்வு!

மதுரையில் இடி மின்னலுடன் கொட்டிய கோடை மழை; பாதியில் முடித்துக்கொண்ட சுவாமி வீதி உலா

மதுரையில் இன்று மாலை வெப்பச் சலனம் காரணமாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், மேலவாச வீதி, தெற்கு மாசு வீதி, கீழமாச வீதி உள்ளிட்ட மதுரை மாநகர் பகுதிகளில் கனத்த மழை பெய்தது.

இதனால் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனர். திடீரென பெய்த மழையால் மேற்கு கோபுரம் செல்லும் சாலையில் வழியாக கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாமியின் வாகனங்கள் திருப்பி கொண்டு செல்லப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!