தங்கை மீனாட்சிக்கு திருமணம் முடித்துவிட்டு மருமகனோடு திருப்பரங்குன்றம் திரும்பினார் பெருமாள்!

தனது தாய் தந்தை திருக்கல்யாணத்தில் பங்கேற்ற முருகப்பெருமான் மீனாட்சிபட்டனத்தில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு தனது ஊர் திருப்பரங்குன்றம் முதற்படை வீடு வந்து சேர்ந்தார். அதே சமயம் தங்கை மீனாட்சிக்கு சுந்தரேசுவரரை தாரைவார்த்து கொடுத்துவிட்டு பவளக்கனிவாய் பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.

திருக்கல்யாண வைபோகம்:

உலகப் புகழ் பெற்றமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 2-ந்தேதி மீனாட்சிஅம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் சுந்தரேஸ்வரரை மீனாட்சி அம்மனுக்கு தாரைவார்த்து கொடுத்து திருக்கல்யாணத்தை நடததிவைப்பதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் கடந்த 1-ந்- தேதி மதுரைக்கு புறப்பட்டுசென்றார். இதே சமயம் தனது தாய் தந்தையான மீனாட்சி அம்மன், சுந்தரரேசுவரர் திருமணத்தை கண்டு தரிசனம் பெறுவதற்காக தெய்வானையுடன் முருகப் பெருமானும் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில கடந்த 2-ந் தேதி நடை பெற்ற திருக்கல்யாண வைபோகத்தில்தெய்வானையுடன் முருகப் பெருமானும், பவளக் கனிவாய் பெருமாளும் பங்கேற்று சம்பிரதாய சடங்குகளை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பூப்பல்லக்கில் ஊர் திரும்பினர்:

மேலும் கடந்த 5 நாட்களாக மதுரையில் தங்கி இருந்த படிபக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிலையில் நேற்று (6-ந்தேதி) மாலை 5 மணியளவில் மதுரை நகை கடைவீதியில் இருந்துவிடைபெற்று தனது இருப்பிடமான திருப்பரங்குன்றத்திற்குமேளதாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் தனித்தனியாக புறப்பட்டனர்.

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் வரையிலுமாக வழிநெடுகிலுமாக பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து முருகப்பெருமான், பவளக்கனிவாய் பெருமாளை வரவேற்று சாமி கும்பிட்டனர். ஒவ்வொரு திருக்கண்ணிலுமாக சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு இரவில் கோவிலுக்கு வந்தடைந்தார்.

தூறலோடு சென்று மழையோடு திரும்பினர்:

கோவிலில் இருந்துமுருகப்பெருமான் தெய்வானையும், பவளக்கனிப்பெருமாளும் மீனாட்சி பட்டணத்திற்கு கடந்த 1-ந் தேதி புறப்பட்டு சென்ற நிலையில் மதுரை நகருக்குள் வந்தபோது தூறல் வரவேற்றது. இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை 5 மணிக்கு தன் இருப்பிடம் புறப்பட்டபோது மழை கொட்டியது. மழையில் நனைந்தபடியேஊருக்கு திரும்பினர். கடந்தகாலங்களில் மதுரையில் இருந்து சுவாமி புறப்பட்டு இரவு 10 மணிக்கு மேல்ஊர் வந்து சேரும். ஆனால் நேற்று மழை கொட்டியதால் நனைந்தபடியே அவசர அவசரமாக இரவு எட்டு மணிக்கு சுவாமி கோவிலுக்கு வந்து சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!